லாரி – கார் நேருக்கு நேர் மோதி விபத்து : குலை நடுங்க வைத்த காட்சி!!

30 October 2020, 2:12 pm
Accident - Updatenews360
Quick Share

புதுச்சேரி : அதிவேகமாக சென்ற கார் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தேவநாதன் இவர் இன்று அதிகாலை புதுச்சேரி வழுதாவூர் பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது தந்தை மற்றும் தாயுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வில்லியனூர் அடுத்த உளவாய்கால் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் இந்த கார் அதிவேகத்தில் வந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த செங்கல் லாரி மீது மோதியதில் அந்த காரின் முன்பக்கம் முழுவதுமாக நொருங்கி சேதம் அடைந்தது.

மேலும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது,

மேலும் காரில் வந்த தேவநாதன், அவரது தந்தை ராமலிங்கம் மற்றும் அவரது தாயார் அலமேலு ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 19

0

0