இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து: சிறுவன் தலை நசுங்கி பலி..

Author: kavin kumar
10 December 2021, 2:16 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஒன்றரை வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்து குறித்து நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவைச் சேர்ந்தவர்கள் திருப்பதி-ராசாத்தி தம்பதியினர். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தனது பேரனை(ஒன்றை வயது) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லாரியின் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட ஒன்றரை வயது சிறுவன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதுகுறறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவனின் தாத்தா, பாட்டி இருவரையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வெளி மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் இசால் விட்டால் தாபேயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 477

0

0