இது தேர்தலுக்கான பீதி அறிக்கை…! குடிமகன் தலையில் ரூ.57 ஆயிரம் கடன் சுமை..!

14 February 2020, 1:17 pm
Madurai TTV Press Meet - updatenews360
Quick Share

சென்னை: ஒவ்வொரு தமிழக குடிமகன் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தியுள்ளனர் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சட்டசபையில் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மொத்தம் 127 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை அவர் வாசித்தார்.

பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல் துறை, சாலை போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். இது குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத இறக்கம் தமிழ்நாட்டின் நிதி சூழ்நிலையை சிக்கலான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என ஓபிஎஸ்சே நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால் நிதி கிடைக்கும் என்று அமைச்சர்கள் கூறிவந்த நிலையில், மத்திய நிதி பகிர்வில் 7500 கோடிக்கு மேல் வரவேண்டி இருக்கிறது.

அறிக்கையை முழுமையாக படித்தோம் என்றால் அடுத்து தேர்தல் வரப்போகிறது என்ற பீதிக்காக  உருவாக்கப்பட்ட அறிக்கையாக உள்ளது தெரியவருகிறது.

ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகன் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தி உள்ளனர். அமைச்சர்கள் அனைவரும் ஏன் அடிக்கடி டெல்லி செல்கிறார்கள் என்பது தெரியவில்லை.

டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார்கள். ஆனால் அதன் அடுத்தகட்ட வளர்ச்சி பணி குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்று விமர்சித்தார்.