விஜய் சாதிக்க முடியாது… கட்சியால் ஒரு பிரயோஜனமும் இல்லை : ரஜினி சகோதரர் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2024, 9:32 am

நடிகர் விஜய் கட்சி தொடங்கியும் எந்த பிரயோஜனம் இல்லை, தமிழகத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயண ராவ் மதுரை வந்தடைந்தார்.

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய வந்திருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட்டு வருகிறார். அவருக்கு எப்போது ரஜினியிடம் இருந்து அழைப்பு வரும் என்ற கேள்விக்கு.? அது போன்று செய்யக்கூடாது அது தவறு என்றும். மேலும், ரஜினியை சாமியாக நினைத்து பூஜித்தாள் சாமியே அவருக்கு நல்லது செய்யட்டும் என்றார்.

இதையும் படியுங்க: ராணுவ வீரர்களுக்கான தேர்வை எழுத வந்த வடமாநில இளைஞர்களுக்குள் அடிதடி.. போலீசார் நடத்திய தடியடி!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கியுள்ளார் என்ற கேள்விக்கு.? வரட்டும் வரட்டும் கமலஹாசன் முயற்சி பண்ணது மாதிரி விஜய்யும் முயற்சி பண்ணட்டும். கட்சி தொடங்குவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது கட்சி தொடங்க விஜய் ஆசைப்பட்டிருக்கிறார்.

ஆனால், கட்சி தொடங்கியும் எந்த பிரயோஜனம் இல்லை, ஒன்றும் சாதிக்க முடியாது. அரசியலுக்கு வந்திருக்கிறார் முயற்சி செய்யட்டும் தாமும் அரசியலுக்கு வர வேண்டுமென மனதில் நினைத்து ஆசைப்பட்டிருக்கிறார். வந்து பிறகு என்ன செய்வார் என்று தெரியவில்லை தமிழ்நாட்டில் இப்போது முடியாது.

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று செய்தியாளர் கேள்விக்கு.? அது முடியாது என்றார். விஜய் முயற்சி பண்ணட்டும். ஆனால் ஜெயிக்க முடியாது. மிகவும் கஷ்டம் என்றார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?