ஒரு கிலோ எடையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் : மருத்துவர்கள் சாதனை!!

28 September 2020, 11:34 am
1 Kg Twins- updatenews360
Quick Share

புதுச்சேரி : ஒரு கிலோ எடை கொண்ட இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ என்பவர் 7 மாத கர்பிணியாக உள்ளார். இவருக்கு கடந்த மாதம் 28ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து ஜெயஸ்ரீக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இரட்டை குழந்தைகளை வெளியே எடுத்தனர். 27 வாரங்களில் பிறந்த (குறை பிரசவத்தில்) குழந்தைகள் என்பதால் இரண்டு குழந்தைகளும் தலா 1கிலோ எடை மட்டுமே இருந்தன.

இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தைகளை 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர். தற்போது இரண்டு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறை பிரசவத்தில் மிக்குறைந்த எடைகள் கொண்ட குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தற்போது குழந்தைகளும் தாயும் நலமுடன் உள்ளனர்.

Views: - 6

0

0