திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் அடுத்தடுத்து ட்விஸ்ட்.. கொளையர்களின் பரபரப்பு வாக்குமூலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 6:54 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அதிலிருந்து 72 லட்சத்து 78 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொள்ளையிடல ஈடுபட்ட வடமாநில கும்பலை பிடிக்க தனிப்படையை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ஆரிப் (வயது 35) மற்றும் ஆசாத் (வயது 37) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் அரியானாவில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப் உள்பட 2 பேரையும் தனிப்படை போலீசார் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்.

கொள்ளையர்கள் 2 பேரையும் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட எஞ்சிய கொள்ளையர்கள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 வடமாநில கொள்ளையர்களை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். கொள்ளையர்கள் கர்நாடகாவில் இருந்து அரியானாவுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும் போலீசார் நடத்திய விசாரணை தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 2 கொள்ளையர்களும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவரப்பட உள்ளனர். இதன் மூலம் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 2 கொள்ளையர்கள் தலைமறைவாக உள்ளதால் எஞ்சிய 2 கொள்ளையர்களையும் கைது செய்யும் நடவடிக்கையை தனிப்படை போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!