இளைஞர் மரணத்தில் திருப்பம்.. தற்கொலைக்கு தூண்டியதாக புகார் : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 7:19 pm
Youth Dead - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே கும்பூர் பகுதியில்இளைஞர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல் அருகே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் கும்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரபாகரன் (வயது 18) மாடு மேய்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர் அப்பகுதியில் தனியார் விடுதியில் இருந்து பணம் மற்றும் லேப்டாப் ஆகிய பொருள்களை திருடியதாக கூறி செல்வம், கோவிந்தன், கோபால், பழனியப்பன், கண்ணதாசன், ராமர் ஆகியோர் இவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த பிரபாகரன் இன்று அதிகாலை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்த மருத்துவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரின் ம‌ர‌ண‌த்தில் ம‌ர்ம‌ம் இருப்ப‌தாக‌ அவரது உறவினர்கள், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனையில் அவரது உடலை வாங்க மறுத்தனர்.

மேலும் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Views: - 160

0

0