இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம் : கொலை செய்த காதலன் உட்பட இருவர் கைது!!

Author: Udayachandran
8 January 2021, 8:04 pm
Murder -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கள்ளிமந்தையம் வாகரை அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலைக்கு எதிரே சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சடலத்தைக் கைப்பற்றி கள்ளிமந்தையம் போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்த இளம்பெண் வேடசந்தூரை அடுத்துள்ள தென்னம்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த கதிா்வேல் மகள் ஜெயஸ்ரீ (வயது 22) என்பதும், அங்குள்ள தனியாா் நூற்பாலையில் வேலை பாா்த்து வந்த அவா் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இது தொடா்பாக பழனி கணக்கன்பட்டி கோம்பைப்பட்டியைச் சோ்ந்த தங்கத்துரை (வயது 26) மற்றும் அவரது உறவினா் ஜெகநாதன் (வயது 30) ஆகிய இருவரையும் கள்ளிமந்தையம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: ஜெயஸ்ரீ வேலை பாா்த்த அதே நூற்பாலையில் தங்கத்துரை மேற்பாா்வையாளராக வேலை செய்து வருகிறாா். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இதில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், காதலனின் பெற்றோா் இவா்களது காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் ஜன.1 ஆம் தேதி வீட்டை வீட்டு வெளியேறிய ஜெயஸ்ரீ தங்கத்துரையிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா். இதனால் தங்கத்துரை மற்றும் உறவினா் ஜெகநாதன் ஆகிய இருவரும் ஜெயஸ்ரீயை இருசக்கர வாகனத்தில் வாகரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு அவரை இருவரும் சோ்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அருகில் இருந்த முள்புதரில் வீசிவிட்டுச் சென்றதாக தெரிவித்தனர்.

Views: - 82

0

0