புலி நகம், நரி பல், யானை தந்தம் வைத்திருந்த இருவர் கைது : வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

Author: kavin kumar
24 January 2022, 4:03 pm

திருச்சி : திருச்சியில் புலி நகம், நரி பல், யானை தந்தம் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி அடுத்துள்ள தேவராயநேரி பகுதியில் ஏராளமான நரிக்குறவர் இனம் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பலர் மான் கொம்பு, நரியின் பற்கள், யானை முடி மற்றும் தந்தத்தின் பகுதிகளை விற்பனை செய்து வருவதாக திருச்சி வனத்துறையினருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வந்தது. புகாரின் பெயரில் திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சட்டவிரோதமாக அப்பகுதியை சேர்ந்த அருண்பாண்டி மற்றும் சௌந்தர்ராஜன் ஆகியோர் யானையின் தந்தத்தை வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் யானை தந்தத்தால் ஆன பொருட்கள், புலி நகம், நரிபல் ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வனத்துறை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?