போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது: பணம், கார், மற்றும் உயர் ரக செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல்

10 July 2021, 9:58 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் உட்பட இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பணம், கார், மற்றும் உயர்ரக செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்

புதுச்சேரி நகர பகுதி லுயிஸ் பிரகாசம் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஆன்ஸ், புகையிலை போன்ற போதைப் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்வதாக பெரியகடை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதனையடுத்து பெரியகடை போலிசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், புகையிலை போன்ற போதை பொருட்கள் அடங்கிய 58 பார்சல்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது,

இதனை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த வீட்டின் உரிமையாளர் பாபுலால், சுரேஷ் பிஸ்நாய், சுமான் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருட்களை தனது காரில் கடத்தி வந்து விற்பனைக்காக பாபுலாலிடம் கொடுப்பார் என்றும், அதனை பாபு லாலிடம் இருந்து கோட்டகுப்பத்தை சேர்ந்த சுமன் வாங்கி கடைக்களுக்கு விற்பனை செய்துவந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ளகுட்கா மற்றும் போதை பொருட்கள், 8 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், இரண்டு கார்கள்,

இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும், அதே போல் வேறு யாராவது இவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்றும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 346

0

0