உலக தலை காயம் தினம்: கோவையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி..!!

Author: Rajesh
20 March 2022, 12:45 pm

கோவை: உலக தலை காயம் தினத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக தலை காயம் தினத்தை முன்னிட்டு கோவையில் 200 க்கும் மேற்பட்டோர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி பேரணியாக சென்றனர். இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

சாலை விதிகளை சரியாக கடைபிடிக்காமலும் , கைபேசி பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுவதாலும் , ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவதாலும் , மது அருந்தி ஓட்டுவதாலும் , விபத்துகள் மூலம் தலைக்காயங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் தலைக்காயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,உலக தலைக்காயம் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தலைக்காயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.

பேரணியில் கலந்து கொண்டோர், தலைக்காயங்களால் ஏற்படும் பாதிப்புகளும்,காயங்களால் ஏற்படும் உயரிழப்புகளை தடுக்கவும், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைய ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர்.

காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சிட்டி யூனிட் முன்பாக துவங்கிய பேரணி, கணபதி சரவணம்பட்டி , காளப்பட்டி , செராயம்பாளையம் வழியாக நீலம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வரை சென்றடைந்தது.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே