மனைவியை கொன்று ஆற்றில் வீசி இரண்டு வருடமாக நாடகம் : தலைமறைவான ராணுவ வீரர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2021, 1:53 pm
Wife murder - Updatenews360
Quick Share

தேனி : மனைவியை கொலை செய்துவிட்டு இரண்டு வருடங்களாக நாடகமாடிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

தேனி பாரஸ்ட் ரோடு 12-வது தெருவைச் சேர்ந்த சிவகுமார் மகன் ராணுவ வீரர் ஈஸ்வரன். இவருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வம் மகள் கிரிஜா பாண்டி என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமான சிறிது காலத்திலேயே கிரிஜா பாண்டி தந்தை உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஈஸ்வரன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு பின்னர் சமரசம் செய்யப்பட்டு ஈஸ்வரனும் கிரிஜா பாண்டியும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

வழக்குப் பதிவு செய்த நாள் முதல் இரு குடும்பத்தாருக்கும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. வழக்கின் முடிவில் ஈஸ்வரன் தனது மனைவி அவரது குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டால் நான் உன்னுடன் இணைந்து வாழ மாட்டேன் என கூறி வந்துள்ளார்.

இதனால் நீண்ட காலமாக கிரிஜா பாண்டி தனது குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இன்னிலையில் ஈஸ்வரனின் தந்தை செல்வத்துக்கு தொடர்பு கொண்டு எனது மகன் என்னையும் உனது மகளையும் அடித்து கொடுமைப் படுத்தி வருகிறான் உன் மகளை சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த கிரிஜா பாண்டியனின் தந்தை செல்வம் தனது மகள் வசிக்கும் பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் வீடு காலி செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது என அக்கம்பக்கத்தினர் அவரிடம் கூறவே செல்வம் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகள் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் எஸ்ஐ கார்த்திகேயன் தலைமையில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு ஈஸ்வரனை தேடி வந்துள்ளனர். நேற்று ஈஸ்வரன் திருவாரூர் அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது

அதை தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஈஸ்வரன் தனது மனைவி கிரிஜா பாண்டி கடந்த 2019 டிசம்பர் 25ஆம் தேதி குடும்ப பிரச்சனை பேசும் போது ஏற்பட்ட ஆத்திரத்தில் கிரிஜா பாண்டியை அடித்ததாகவும் அப்போது எதிர்பாராதவிதமாக கிரிஜா பாண்டியன் தலை சுவரில் பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டதாகவும், தனது சகோதரர் பழனி சிறப்பு காவலர் சின்ன ஈஸ்வரனிடம் தகவல் தெரிவித்து சாக்குப்பையில் போட்டு கிரிஜா பாண்டியை அரண்மனைப்புதூர் முல்லைப் பெரியாற்றில் தூக்கி எறிந்து விட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் ஈஸ்வரன் அளித்தார்.

இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆற்றில் வீசப்பட்ட கிரிஜா பாண்டியின் உடலை தீயணைப்பு துறை உதவியுடன் தனிப்படையினர் முல்லைப் பெரியாற்றில் தேடி வருகின்றனர். மனைவியை கொன்று விட்டு இரண்டு வருடங்களாக நாடகமாடிய ராணுவ வீரர் ஈஸ்வரனின் இந்த செயல் தேனி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

Views: - 326

0

0