தெருவுக்கு உதயநிதி பெயர்.. காய் நகர்த்திய திமுக கவுன்சிலர்கள் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 11:57 am
Udhayanidhi Street - Updatenews360
Quick Share

கரூர் மாநகராட்சியில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், தெரு ஒன்றுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதியின் பெயரை வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேரனும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி, தி.மு.க.,வில் முக்கிய பதவிகளை வகிக்கிறார்.

சமீபத்தில், அமைச்சரவையிலும் அவர் சேர்க்கப்பட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.

இதில், 36வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வசுமதி, ‘கரூர் மாநகராட்சி, 36வது வார்டில், ‘மணக்களம் தெரு’ என்று பதிவேட்டில் உள்ளது. அந்த பெயரை நீக்கிவிட்டு, ‘உதயநிதி முதல் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாவது தெரு’ என பெயரை மாற்ற வேண்டும்’ என, தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு, தி.மு.க.,வின் 46 கவுன்சிலர்களும் ஆதரவு அளித்தனர்.மேலும், அ.தி.மு.க.,வின், இரு மாமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்காது மவுனமாக இருந்ததால், ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Views: - 352

0

0