உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் : கலகத் தலைவன் படத்தை பார்த்த பின் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த தாய் மாமன்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2022, 2:25 pm

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தாய் மாமா தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் வெளியாகியுள்ள திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்துள்ள கலகத் தலைவன் திரைப்படத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஸ்டாலினின் தாய் மாமா தட்சிணாமூர்த்தி தனது குடும்பத்துடன்  பார்ப்பதற்காக வந்திருந்தார்.

முன்னதாக திரையரங்க வாயிலில் அவரை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்களும் கட்சியினரும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து படத்தை பார்ப்பதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தக்ஷிணாமூர்த்தி, எனது மருமகன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகன் நடித்த இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்.

நான் அவரது தாத்தா கலைஞர் நடிக வேல் எம்.ஆர் ராதாவிற்கு ஈடு கொடுத்து நடித்த பல நாடகங்களை பார்த்திருக்கிறேன். அவர் எடுத்த படங்களை அவருடன் அமர்ந்து பார்த்திருக்கிறேன். தற்போது அவர் பேரன் நடித்த படத்தையும் பார்க்க வந்திருக்கிறேன் என்று கூறினார்.

மேலும் அவருக்கு இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகள் இருப்பினும் உங்கள் மூலமாகவும் முதலமைச்சரையும் நான் அவருக்கு அமைச்சர் பதவியயும் தந்து சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இந்த படம் 100 நாட்கள் ஓட வேண்டும் 100 நாள் விழாவில் நான் கண்டிப்பாக வந்து கலந்து கொள்வேன். இந்த 99 வயதில் அவர் படத்தை பார்க்க வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

கடந்த நவம்பர் 14 ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது தாய் மாமா தட்சிணாமூர்த்தியின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வந்து ஆசி வாங்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!