தருமபுரம் ஆதீனத்தை சந்தித்த உதயநிதி : திருநீறு பூசி ஆசி !!

22 November 2020, 10:47 am
dharumapuram Udhayanithi - Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனமடத்தில் கலைஞர் கருணாநிதி தருமபுரம் ஆதினம் 26வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆசிபெற்றார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களுடன் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது. இந்த நிலையலி திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் விடியலை தேடி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்கிய உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்த நிலையலி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகான சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். தொடர்ந்து தமிழ்கடவுள் சேயோன் என்ற மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தொகுத்து அளித்த நூலை தருமபுரம் ஆதீனம் வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

1972-ஆம் ஆண்டு ஆதீனமடத்தில் கலைஞர் மு.கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசிபெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கினார்.

Views: - 25

0

0