43 வயதில் சொந்த ஊருக்கு முதன்முறையாக வந்த கருணாநிதி பேரன்! மண் பாசமா? அரசியல் வேஷமா?
30 November 2020, 7:37 pmதிருவாரூர் என்றாலே ஞாபகம் வருவது கருணாநிதிதான். காரணம் திருக்குவளையில் பிறந்த கருணாநிதி தனது அரசியலை ஆரம்பித்தது இந்த ஊரில் தான், மாணவ பருவத்திலேயே அரசியலுக்கு வித்திட்ட கருணாநிதி, தஞ்சாவூரில் ஒரு பகுதியாக இருந்த திருவாரூரை தனி மாவட்டமாக அறிவித்தார். திருக்குவளை முத்துவேல் கருணாநிதி, இந்த வார்த்தைகளில் முதல் மூன்று எழுத்துகள் தனியே எடுத்தால் திமுக.
திருவாரூரில் போட்டியிட்டு தோற்காத சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. கடைசியாக திருவாரூர் எம்எல்ஏ வாக கருணாநிதி இருந்து இறந்தவர். இங்கதான் அவரது மகள் செல்வி வசித்து வருகிறார்.
கருணாநதியின் வாரிசுகள் அவ்வப்போது திருவாரூர் பக்கம் வந்து செல்கின்றனர். ஆனால் கருணாநிதியின் பேரனும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தற்போது தான் திருவாரூர் பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார்.
அதுவும் வாக்கு கேட்க வந்திருக்கும் அவர், அப்படியே ஊரை சுற்றி பார்த்துவிடலாம் என ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். “அடடா“ என ஆச்சரியப்பட வேண்டியது திருவாரூர் மக்கள்தான், தற்போது தான் உதயநிதிக்கு இங்க வர தோன்றியிருக்கிறதா என்று கேட்டால், இல்லை. தேர்தல் வரப்போகுதல்லவா வாக்கு என்று போர்வையில் ஊர் சுற்றிப்பார்க்கத்தான் இதெல்லாம்.
திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலும் திமுக வென்றிருக்கிறது. அதற்கு காரணம் கருணாநிதிதான். கருணாநிதிக்கு பின் ஸ்டாலின், சொந்த ஊரில் வந்து நமக்கு நாமே திட்டத்தை துவக்கினார். தற்போது 43 வயதில் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் பக்கம் வந்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட போதும் கூட வராத உதயநிதி ஸ்டாலின், தற்போது வயல் வரப்புகளிலும், டீ கடைகளிலும், உடன்பிறப்பு வீடுகளிலும் புரள்கிறார். எல்லாம் வாக்கு அரசியல்.
கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்ப ஸ்டாலின் வந்துவிட்டார் என்று நிரூபிக்க தேவை திருவாரூர் மக்கள். அதற்காகத்தான் திருவாரூர் மாவட்டத்தின் மீது உதயநிதிக்கு திடீர் பாசமோ?
கொரோனா காலம் என்பதால் எல்லா நிகழ்ச்சிகளையும் காணொளி வாயிலாக நடத்திய திமுக, தற்போது கொரோனா ஊரடங்கு இன்னும் முடியாத பட்சத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கு படையெடுத்து வரக் காரணம், இந்த வாக்குதான்.
திருவாரூர் மாவட்டத்திற்கு உதயமான உதயநிதிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அரியணையில் ஏற இங்குள்ள ஆருர் தியாகராஜரும், மக்களும் காரணம் என்று நன்கு புரிந்து கொண்டவர் கருணாநிதி. அந்த சூட்சமத்தை உணராமல் திடீர் என்று திருவாரூர் பயணம் செய்துள்ள உதயநிதிக்கு எப்போது புரியும். திருவாரூர் மக்களின் கையில் உள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
0
0