உங்கள் தொகுதி… எங்கள் பார்வை… அம்பத்தூர் யார் பக்கம்?

5 March 2021, 9:30 pm
Ambattur - updatenews360
Quick Share

349 வாக்குசாவடிகளில் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு தங்களோடு தொடர்பில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்ய ஆவலுடன் காத்திருக்கும் அம்பத்தூர் தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 3 இலட்சத்து ஏழாயிரம். இங்கு ஆண் வாக்காளர்கள் 500 பேர் அதிகம்.

தமிழகத்தின் மாபெரும் தொழிற்பேட்டையாக அம்பத்தூர் உருவாக
காமராஜர் ஒரு முக்கிய காரணம். அவர் காலத்தில் 400 தொழிற்சாலைகளுடன் தொடங்கப்பட்ட தொழிற்பேட்டை தற்போது 17000 தொழிற்சாலைகளுடன் விரிவடைந்து இருக்கிறது.
1953ல் டன்லப் டயர் உற்பத்தி சாலையுடன் துவங்கிய தொழில் முகம் தற்போது தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வரை வளர்ச்சி கண்டு இருக்கிறது.

2011ல் வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியைப் சுவைக்க அஇஅதிமுக காத்திருக்கிறது. அதற்கு துணையாக பாமக, தேமுதிக கட்சிகளின் வாக்குவங்கி தெம்பூட்டுகிறது…

நான்கு புறமும் ஏரிகளால் சூழப்பட்ட தொகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது வியப்பு. அஇஅதிமுகவின் ஹாட்ரிக் ஆசையை முறியடிக்க திமுக செயலாளர் துரைமுருகன் 3 பகுதி செயலாளர்களை நியமித்து அஇஅதிமுகவுக்கு நெருக்கடி தருகிறார்.

தேர்தல் நேரத்து மாயாஜாலம் வெற்றியை எந்த பக்கமும் திருப்பலாம்.

Views: - 27

0

1