அடையாளம் தெரியாத 35 வயது நபர் கல்லால் அடித்துப் படுகொலை : ஈரோடு அருகே பயங்கரம்!!

29 November 2020, 4:11 pm
Sathy murder - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கல்லால் அடித்து வாலிபர் படுகொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி, வைத்தியநாதபுரம் கிராமத்தை ஒட்டிய முட்புதரில், இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பிணமாக கிடப்பதை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.

இதனை கடம்பூர் காவல் நிலையத்திற்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கடம்பூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இறந்த நபருக்கு 35 வயது இருக்கும் எனவும், தலையில் பெரிய கல்லால் அடித்தும், முகத்தை சிதைத்தும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வரவழைத்து, விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர். வாலிபர் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடம்பூர் மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0