கவனம் மக்களே.. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம் : பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2024, 6:23 pm
rain warn
Quick Share

கவனம் மக்களே.. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம் : பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை!!

இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழு வீச்சில் தயார் நிலையில்
இருக்க வேண்டும் என்று 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளது.

அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க: 400 சீட் வென்றதும் ஞானவாபி உள்ள இடத்தில் ராமர் கோவிலை போல அடுத்த பிரம்மாண்டம் : பாஜக பிரமுகர் சர்ச்சை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வருகின்ற மே-19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 181

0

0