வந்தாச்சு தடுப்பூசி : மதுரையில் கோவாக்சின் செலுத்த மக்கள் ஆர்வம்!!!

15 July 2021, 11:38 am
Quick Share

மதுரை: மதுரையில் 2 வாரங்களுக்கு பின்னர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுவதால் தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 54 ஆயிரத்து 73 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர், இன்று மொத்தம் 11,160 டோஸ் கையிருப்பில் உள்ள நிலையில் 1600 டோஸ் மட்டுமே கோவாக்சின் உள்ளதால் கோவாக்சின் 2வது தவணை மட்டும் செலுத்தப்படுகிறது, கோவாக்சின் முதல் தவணை செலுத்தி கொண்ட சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 2வது தவணை செலுத்தி கொள்ள காத்திருப்பு, இதுவரை கோவாக்சின் முதல் தவணை 53,553 பேரும் 2ம் தவணை 21,787 பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்,

இன்று 1600 டோஸ் மட்டுமே கோவாக்சின் கையிருப்பில் உள்ளதால் 7 மையங்கள் மூலமாக 2வது தவணை செலுத்துப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து செலுத்தப்படுகிறது, இன்று 3 சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட 27 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது, அனைத்து முகாம்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர், மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வரும் நிலையில் கோவாக்சின் அதிகளவில் ஒதுக்கீடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 144

0

0