“சாளரத்தை மூடிவிட்டால் காற்றின் வீச்சு நிற்பதில்லை“ : அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கம் குறித்து வைரமுத்து கண்டனம்!!

12 November 2020, 12:11 pm
Vairamuthu - Updatenews360
Quick Share

அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கவிஞர் வைமுத்து டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராயின் Walking with the Comrades என்ற புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எதிர்ப்பையடுத்து எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் பகுதிகளுக்கு சென்ற அனுபவம் குறித்து அருந்ததி ராய் புத்தகத்தில் எழுதியிருந்தார். எதிர்ப்பு எழுந்ததால் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு புத்தகம் நீக்கப்பட்டது.

இதற்கு தமிழத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதற்கு தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை. சாளரத்தை மூடிவிட்டால் காற்றின் வீச்சு நிற்பதில்லை என பதிவிட்டுள்ளார்.

Views: - 26

0

0