‘வலிமை‘ பட அப்டேட் வாங்கித் தருவதாக வானதி சீனிவாசன் வாக்குறுதி : டிவிட்டரில் டிரெண்டாகும் டிவீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2021, 11:54 am
Vanathi Valimai - Updatenews360
Quick Share

நான் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் வாங்கித் தருவதாக வானதி சீனிவாசன் டிவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் டிவிட்டரில் வானதி சீனிவாசனிடம் நெட்டிசன் ஒருவர் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், நான் பெற்ற பெற்ற உடன் நிச்சயம் வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி என பதிலளித்துள்ளார்.

நெட்டிசன் கேட்ட கேள்விக்கு வானதி சீனிவாசன் அளித்துள்ள பதில் டிரெண்டாகி வருகிறது. முன்னதாக நடிகர் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

மேலும் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மைதானத்தில் பதாகைகள் ஏந்தியும், வீரர்களிடம் வலிமை அப்டேட் கேட்டு, அதற்கு அஜித் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடதக்கது.

Views: - 108

0

0