மணல் கடத்தல் விவகாரம்… VAO மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ; திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு..

Author: Babu Lakshmanan
14 October 2023, 12:53 pm
Quick Share

பழனி அருகே அனுமதி இன்றி மண் அள்ளியவர்களை தடுத்து நிறுத்திய விஏஓ மற்றும் உதவியாளர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக திமுக பிரமுகர்கள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில் அனுமதி இன்றி மண் அள்ளி வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆயக்குடி விஏஓ கருப்புசாமி, உதவியாளர் மகுடீஸ்வரன் மீது மண் அள்ளிய குண்டர்கள் அதிகாரிகள் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சித்ததாக நேற்று ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

மேலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கொலை செய்ய முயன்றவர்களை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணி பாதுகாப்பு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், அதிகாரிகள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற லாரி பறிமுதல் செய்தும், திமுக பிரமுகர்களான சக்திவேல் மற்றும் பாஸ்கரன் உள்பட மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இன்றி மண் அள்ளிய வழக்கு ,கொலை முயற்சி, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது,உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 276

0

0