கோவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார்!!

Author: Udayachandran
14 October 2020, 1:47 pm
SP Velumani- Updatenews360
Quick Share

கோவை : தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே பூலுவப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஆற்றுப்படுகைகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் புதியதாக சாலைகள் அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பேரூர் பகுதியில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு பெட்டகத்தை வழங்கினார்.

தொடர்ந்து ஆலந்துறை பகுதியில் 67 லட்சம் மதிப்பில் கோவை சிறுவாணி செல்லும் சாலை முதல் நரசிபுரம் சாலை வரை தடுப்புச்சுவர் அமைக்கும் மேம்பாடு செய்யவும் பணிகளுக்காக பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கோவை பூலுவம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உழைக்கும் மகளிருக்கான மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனத்தை 19 பேருக்கு வழங்கினார். மேலும் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி செம்மேடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.

Views: - 34

0

0