எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் அஞ்சாமல் இருந்தவர் வசந்தகுமார் : நினைவிடத்தில் ராகுல் நெகிழ்ச்சி!!!

1 March 2021, 12:38 pm
Rahul Vasantha Kumar -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் நினைவிடத்திற்கு சென்ற ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தி பின் வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கன்னியாகுமரி பகுதியில் ராகுல்காந்தி பேசுகையில், “உங்கள் சிறப்பான வரவேற்புக்கு நன்றி. இன்று நம் தலைவர் வசந்தகுமாரை இழந்து தவிக்கிறோம். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், மற்ற அரசு அவரை மிரட்டினாலும் அஞ்சாமல் அவர் காங்கிரஸ் பின்னால் உறுதியாக நின்றதால் அவரை நினைவுகூர்கிறோம்.

அவர் எப்போதுமே பின்தங்கிய மக்களுக்காக, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள விளிம்புநிலை மக்களுக்கான உழைத்துக் கொண்டிருந்தார். ஏழை குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்தார். ஒரு குடும்பத்திற்கு திருமணம் செய்ய நிதி உதவியாக 10,000 ரூபாய் வீதம் 1,000 குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கிறார்.

விதவைகளுக்கு ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்திருக்கிறார். பல்வேறு நீர் நிலைகளை சீரமைத்திருக்கிறார். ஏழைகளுக்கு உணவு அளித்தவர். அவரை போன்ற வலிமை வாய்ந்த, திறமை வாய்ந்த, சக்தி படைத்த மனிதரை இழந்திருக்கிறோம். அவரை பற்றி நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

இதையடுத்து வசந்தகுமார் நினைவிடத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு வசந்தகுமாருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் வசந்தகுமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Views: - 8

0

0