வி.சி.க.வை சேர்ந்த பிரபல ரவுடி கைது.! ஆந்திராவுக்கு தப்பியோடிய போது சிக்கினான்.!!

31 July 2020, 5:02 pm
Chennai Rowdy Arrest - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : மருந்தக உரிமையாளரை மிரட்டி மாமூல் கேட்டு கொலை மிரட்ட விடுத்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் மன்னிவாக்கம் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவரிடம் செல்போன் மூலம் மாமூல் கேட்டு விசிக-வை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ வலைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி காவல்நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர், கூடுவாஞ்சேரி காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஓட்டேரி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிலம்பரசனை தேடி வந்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலம்பரசன் மீது ஏற்கனவே 9 வழக்குகள் உள்ளன. இரும்பு வியாபாரியை மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 22ஆம் தேதி வெளியே வந்துள்ள நிலையில், மீண்டும் சிலம்பரசன் மீது புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில்,தாம்பரம் அருகே இரும்பொலியூர் பகுதியில் சிலம்பரசனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் தப்பிச் செல்ல முயன்ற சிலம்பரசனை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவனிடம் இருந்து மூன்று கைப்பேசிகள், கத்தி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.