வேளச்சேரி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நிறைவு : வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்…

17 April 2021, 8:32 pm
Quick Share

சென்னை : வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு வி.வி.பேட் இயந்திரத்தை ஸ்கூட்டரில் வைத்து எடுத்து சென்றதை பார்த்த பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீதிமீறல் நடந்திருப்பதால் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92-ல் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களின் வாக்குக்களை பதிவு செய்து வந்தனர்.

மாலை 7 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மொத்தம் இருந்த 548 வாக்காளர்களில் வெறும் 186 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

Views: - 29

0

0