வேளாங்கண்ணி TO கோவா சிறப்பு ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!

Author: Aarthi Sivakumar
19 August 2021, 9:50 am
1southern railway - updatenews360
Quick Share

சென்னை: வேளாங்கண்ணி- கோவா சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென் மேற்கு ரெயில்வேயின் கோரிக்கையின் அடிப்படையில் வேளாங்கண்ணி- கோவா வாராந்திர சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

வாஸ்கோடா காமா- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-07353), வரும் 23, 30 மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 6, 13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

இதைப்போல் வேளாங்கண்ணி- வாஸ்கோடா காமா வாராந்திர சிறப்பு ரெயில் (07354), வரும் 24, 31 மற்றும் செப்டம்பர் மாதம் 7, 14 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 240

0

0