பிஸ்கட் வியாபாரியின் வீட்டில் 50 சவரன் கொள்ளை… சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை…!!

Author: Babu Lakshmanan
29 March 2022, 11:46 am

வேலூர் : சத்துவாச்சாரியில் உள்ள பிஸ்கேட் வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 50 சவரன் தங்க நகைகள்,ரூ. 80 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கானார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கவேல் (57) – புஷ்பா தம்பதியினர். மாணிக்கவேல் பிஸ்கேட் வியாபாரம் செய்து வருகிறார். மாணிக்கவேல் குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கும்பகோணத்தில் உள்ள திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் உள்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 50 சவரன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பட்டுப்புடவைகள் ,வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து சத்துவாச்சாரி கவல் துறையினக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வீட்டு மாடி மீது ஏறி லைட்டை உடைத்துவிட்டு மாடிப்படிபக்கம் உள்ள கதவை உடைத்து உள்ளே வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?