‘ஹே தள்ளு.. தள்ளு… தள்ளு’… பழுதான அரசுப் பேருந்தை புத்தகப் பையை சுமந்து கொண்டே தள்ளும் பள்ளி மாணவர்கள்… வைரல் வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 November 2022, 10:01 pm

வேலூர் ; பழுதான அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து குடியாத்தம் நகர பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பள்ளி நேரங்களில் பேருந்துகள் குறைவாக இயக்குவதால் சில சமயங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று குடியாத்தத்தில் இருந்து மோர்தானா செல்லும் அரசு பேருந்து பழுதாகியதால், பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் பேருந்து தள்ளி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும், அதுவும் பழுதில்லாத பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?