சேர்ந்து வாழ மறுத்த மனைவி… 20 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… பிரிய மனமில்லாத கணவன் எடுத்த விபரீத முடிவு..!!

Author: Babu Lakshmanan
6 January 2024, 2:55 pm

வேலூர் அருகே கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகன் தியாகராஜன் வயது (39). இவர் கட்டிட வேலை செய்து வருகின்றார். குப்பத்தா மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவர் உடன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி, தற்பொழுது ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தியாகராஜன் மற்றும் அவரது மனைவி ரேவதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, தற்பொழுது ரேவதி தியாகராஜரை பிரிந்து, அவரது அண்ணன் உடன் கண்ணமங்கலத்தில் வசித்து வந்துள்ளார்.

நேற்று காலை 7:00 மணி அளவில் காட்பாடி பிரம்மபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் தனியார் பல்கலைக் கழகத்திற்ககு செந்தமான விவசாய பண்ணை உள்ளது. அதில் ரேவதி வேலை செய்து வந்துள்ளார். தியாகராஜன் சென்னையில் இருந்து வந்து தனது மனைவி ரேவதியிடம் சேர்ந்து வாழும்படி வற்புறுத்தி, வாய் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு ரேவதி மறுப்பு தெரிவிக்கவே, மனம் நொந்த தியாகராஜன் அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதனையடுத்து, அவ் வழியாகச் சென்ற அப்பகுதி மக்கள் வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என காட்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அடிப்படையில் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் காவலர் குமார் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்டவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!