ராமர் கோவிலுக்கு நிதி திரட்ட கோவை வந்த வேலூர் இப்ராஹிம் கைது
31 January 2021, 1:02 pmகோவை: ராமர் கோவில் கட்ட நிதி திரட்டுவதற்காக கோவை வந்த பாஜகவை சேர்ந்த வேலூர் இப்ராஹிமை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் இப்ராஹிம் பா.ஜ.க.,வில் இணைந்து மத நல்லிணக்க பரப்புரைகள் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கோவையில் இன்று நிதி திரட்ட வந்தார்.
அவரை செட்டிபாளையம் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவரை கைது செய்து மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.
இதுகுறித்து வேலூர் இப்ராஹிம் கூறுகையில், “மத நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது சில பிரிவினைவாத சக்திகளால் எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசார் என்னை கைது செய்கின்றனர். அவர்களை ஒடுக்குவதற்கு பதிலாக என்னை கைது செய்கின்றனர்.
கைதாகி சென்றாலும், மீண்டும் வந்து ராமர் கோவில் அமைக்க நிதி திரட்டுவேன்.” என்றார்.
0
0