ராகுல் காந்தி ஒரு ஜோக்கர்… நேரடியாக விவாதிக்க தயாரா..? திருமாவளவனுக்கு வேலூர் இப்ராஹிம் சவால்..!!

Author: Babu Lakshmanan
28 March 2023, 8:44 am

திண்டுக்கல் : அதிமுகவின் அனைத்து கூட்டணிகளையும் ஒன்றிணைப்போம் எனவும், பாரதிய ஜனதா கட்சி சொந்த காலில் நிற்க வேண்டும் என அண்ணாமலை கூறியதாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார் . தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வேலூர் இப்ராஹிம், பாரதிய ஜனதா கட்சி தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என அண்ணாமலை கூறியதாகவும், இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார் . அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது எனவும், அதிமுகவுடன் கூட்டணி தொடர பாஜக விரும்புவதாகவும், அவர்களும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் அண்ணாமலை குறித்து பேசும் கருத்துக்களை பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை எனவும், அதிமுகவை சேர்ந்தவர்கள் வரம்பு மீறி பேசினால் கண்டிப்போம் எனவும், அதிமுகவின் அனைத்து அணிகளையும் ஒன்றிணைப்போம் எனவும் கூறினார். தொடர்ந்து, திருமாவளவன் உள்ளிட்டவருக்கு நேரடியாக சவால் விடுவதாகவும், குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு இல்லாமல் எத்தனை பேர் அரசுப் பணியில் இருப்பது குறித்தும் விவாதிக்கலாம் எனவும் தெரிவித்தார் .

ராகுல் காந்தி ஒரு ஜோக்கர் எனவும், அவர் ஒரு விளையாட்டு பிள்ளை எனவும் கூறிய வேலூர் இப்ராஹீம், அவருக்கு வழங்கிய தீர்ப்பு குறித்து மத்திய அரசிற்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை எனவும் கூறினார். அதானியும், அம்பானியும் இந்த நாட்டிற்கு மிகப் பெரிய தொழில் அதிபர்கள் எனவும், அவர்கள் மூலம் பல கோடி ரூபாய் அரசுக்கு வரி கட்டி வருவதால், அதன் மூலம் ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள் மத்திய அரசின் மூலம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார் . அதானி அம்பானி குறித்து ராகுல் காந்தி தெரிவிப்பது தவறான பிம்பம் எனவும், இது குறித்து மக்களிடம் தெளிவாக தெரிவிப்போம் எனவும் தெரிவித்தார் .

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…