தாயிக்கு வந்த போன் கால்… ஓடி வந்த பார்த்த போது சடலமாக கிடந்த மகன் ; சக நண்பன் செய்த கொடூர செயல்…!!

Author: Babu Lakshmanan
30 January 2024, 12:54 pm

ஒடுக்கத்தூரில் மது அருந்தும் போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சக நண்பர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ஓங்கப்பாடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாபு என்பவரின் மகன் கௌதமன் (19). இவர் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், புலிமேடு கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (35) என்பவருக்கும் கடந்த ஒரு மாத்திற்கு முன்பாக குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கார்த்திக் மற்றும் கௌதமன் நேற்று ஒன்றாக மது குடிக்க சென்றதாகவும், அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், கெளதமனின் அம்மாக்கு போன் செய்த கார்த்தி “உன்னோட மகனை கொலை செய்ய போறேன்,” என்று கூறியுள்ளார்” உடனடியாக கௌதமன் உறவினர்கள் ஓடி வந்து பார்த்த போது கௌதமன் சடலமாக கிடந்துள்ளார்.

மது பாட்டினால் தாக்கி, கத்தியால் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் குத்தியுள்ளார்.

தகவல் அறிந்த வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து கொலை செய்த கார்த்தியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?