ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான புதிய வெப் தொடரின் அப்டேட்..!

Author: Vignesh
29 September 2022, 2:00 pm
Quick Share

சந்தோஷ்நாராயணன் இந்த வெப் தொடருக்கு இசையமைத்து வருகிறார்
ஆஹா தமிழ் ஓடிடித்தளத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய வெப் தொடரின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். தன்னுடைய வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பெரும்பாலும் புகழ்பெற்ற நாவல்களையே படமாக்கி வரும் அவர், தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். வெற்றிக்கரமான இயக்குனராக மட்டுமல்லாமல் நல்ல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் வெற்றிமாறன் தயாரிப்பில் புதிய வெப் தொடர் ஒன்று உருவாகியுள்ளது. இந்த வெப் தொடரை ‘அண்ணனுக்கு ஜெய்’ இயக்கிய ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த வெப் தொடரில் கலையரசன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இந்த வெப் தொடருக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் இந்த வெப் தொடருக்கு பேட்டைக்காளி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆஹா தமிழ் ஓடிடித்தளத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடர் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 215

0

0