கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி: அரிசியில் ‘அ’ எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்..!!

Author: Aarthi Sivakumar
15 October 2021, 11:05 am
Quick Share

கோவை: சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் குழந்தைகளின் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

சரஸ்வதி, ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது இதைத்தொடர்ந்து நவராத்திரியின் நிறைவு நாளான இன்று விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் என்றழைக்கப்படும், குழந்தைகளுக்கான கல்வி கற்பிக்கும் பணியை பெற்றோர் முன்னிலையில், வேதவிற்பன்னர்கள் துவக்கி வைத்தனர்.

இதற்காக, கோவை சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு, குழந்தைகளின் பெயர்களை பெற்றோர் முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர். அதன்படி இன்று பச்சரிசி, வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருட்களோடு பெற்றோர் குழந்தைகளோடு கோவிலுக்கு வந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பெற்றோர் மற்றும் குழந்தைகள் முன்னெச்சரிக்கையாக இருக்க கோவில் நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. இருப்பினும், அரசு அறிவிப்பை அடுத்து இன்று சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

Views: - 242

0

0