மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டல் : விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது!!

17 November 2020, 5:29 pm
vijay Fan arrest - Updatenews360
Quick Share

சென்னை : மளிகை கடையில் மாமூல் கேட்டு பெண்ணை மிரட்டிய விவகாரத்தில் நடிகர் விஜய் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் அருகே உள்ள பெருங்குளத்தூர் பகுதியல் அருணகிரி நாதர் தெருவில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் பார்வதி. இவரது கடைக்க வந்த வாலிபர் ஒருவர், நீங்கள் தீபாவளி பட்டாசு கடையை உரிமம் இல்லாமல் நடத்தி வருகிறீர்கள், இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் இருக்க ரூ.40 ஆயிரம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து கடை உரிமையாளர் அதிர்ச்சியாகி உடனே பீர்க்கன்காரணை காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு காவல் ஆய்வாளர் பொன்ராஜ் என்பவரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் விசாரணை நடத்திய நிலையில், கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை கொண்டு ஆய்வு செய்து, கடைக்கு வந்த நபர் குறித்து விசாரணை தொடங்கினார்.

பின்னர் கடை உரிமையாளரை மிரட்டிய வாலிபர் பெருங்குளத்தூர் குண்டு மேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். செந்தில்குமார் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவரும் என்பதும் தெரியவந்தது. மோசடி செய்ய முயற்சி மற்றும் பெண்ணை மிரட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.