ஆலியா-சஞ்சய் போல அடுத்து மாறப்போகும் ரியல் ஜோடி.. சேர்த்து வைக்கும் முயற்சி தொடங்கியது..!

Author: Rajesh
30 April 2022, 12:41 pm

ஒவ்வொரு வருடமும் விஜய் டிவி வழங்கும் விஜய் டெலி அவார்ட்ஸ் மூலம் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. இந்த ப்ரோமோவை வைத்து பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் உடைய காதலி இவர்தான் என ரசிகர்கள் உறுதி செய்து விட்டனர்.

ஏனென்றால் இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது எழில் பெறுவது போல் காண்பிக்கப்பட்டிருக்கிறது . எழில், இந்த விருது கிடைத்ததற்காக தன்னுடன் நடித்தவர்களுக்கும், தான் இந்த நிலைமைக்கு வரக் காரணமாக இருந்த அவர்களுக்கும் நன்றி செலுத்துவோம் என மேடையில் பேசும்போது ராஜா ராணி2 சீரியலின் கதாநாயகி ரியா உடைய முகத்தில் ஏற்படும் மாற்றத்தையும் கேமராவில் படம்பிடித்து அந்த ப்ரோமோவில் காட்டியிருப்பார்கள்.

இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு ராஜா ராணி1 சீரியலில் நடித்த கதாநாயகன் சஞ்சீவ் மற்றும் கதாநாயகன் ஆலியா இருவரையும் சேர்த்து வைத்து பேசி, அதன் பிறகு அடுத்த டெலி அவார்ட்ஸ்-இல் இருவரையும் ப்ரொபோஸ் செய்ய வைத்து விட்டனர்.
இப்படி விஜய் டிவி ஜோடி சேர்த்து விடும் வேலையை சரியாக பார்ப்பதால், சஞ்சீவ்-ஆலியாவை தொடர்ந்து அடுத்து ரியல் ஜோடியாக மாறப்போகுது விஷால் மற்றும் ரியாவா? என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் இந்தப் ப்ரோமோவை பார்த்தபின் கிண்டல் அடிக்கின்றனர்.

ஏற்கனவே விஷால் மற்றும் ரியா இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனவும் விஷால் மூலமாகத்தான் மாடலிங் துறையில் இருந்த ரியா, ராஜா ராணி2 சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார் என சொல்லப்பட்டது. எனவே நண்பர்களாக இருக்கும் இவர்கள் இனி வரும் நாட்களில் காதலர்களாக மாறப் போகின்றன என ரசிகர்கள் கணித்த கணிப்பு சரியாக இருக்குமா என சம்பந்தப்பட்ட அவர்கள் வாயை திறந்தால் மட்டுமே தெரியும்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!