விஜயகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

Author: Babu
13 October 2020, 5:14 pm
dhansuh - vijayakanth - updatenews360
Quick Share

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் வீடுகளுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது வாடிக்கையாகி விட்டது. மர்ம நபர்கள் தொலைபேசியில் மிரட்டல் விடுப்பதும், பிறகு சோதனைக்கு பிறகு வதந்தி என்பது தெரிய வருவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் வீடுகளுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டதை தொடர்ந்து, போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளது.

பின்னர், அலைபேசி எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம் மரக்கணத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Views: - 48

0

0