போலீஸ், ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம்… அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை!

26 March 2020, 7:54 pm
vijayakanth 02 updatenews360
Quick Share

கொரோனா தடுப்பு பணியில் உழைத்து வரும் போலீசார், ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டுமென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் அரசு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கியதற்கு தேமுதிக சார்பில் வரவேற்கிறேன்.

அதேவகையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும், காவல்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் இதேபோன்று ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கடும் வெயிலையும் பாராமல் தமிழக போலீசாரும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும், கொரோனா நோயில் இருந்து மக்களைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதை கருத்தில் கொண்டு இப்பணிகளை  செய்து வரும் அனைவருக்கும் தேமுதிக சார்பாக எனது வாழ்த்துகளையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Reply