வாரிசு வெளியாவதில் சிக்கல்..? நேரடியாக களமிறங்க விஜய் முடிவு : நாளை நடைபெறும் முக்கிய சந்திப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2022, 8:00 pm

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் மன்ற கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகளை நாளை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தளபதி விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

வாரிசு படம் வெளியாவதில் உள்ள சிக்கல் தொடர்பாக மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள, வாரிசு படத்தை பொங்கலுக்கு வெளியிடலாமா வேண்டாமா என எழுந்துள்ள சர்ச்சையை பற்றி பேச விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு நடிகர் விஜய் வர உள்ளதாகவும் தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் என அனைவரும் அக்கூட்டத்திற்கு பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?