கூகுள் மேப்பால் குரூப் 1 தேர்வை தவற விட்ட மாணவி : எதிர்காலம் கேள்விக்குறியானதாக கதறிய சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2022, 6:13 pm
Google map - Updatenews360
Quick Share

கோவை பீளமேடு பகுதி நேஷனல் மாடல் பள்ளி இன்று குரூப் ஒன் தேர்வுகள் நடைபெற்றது. இதில் 45 அறைகளில் தேர்வாளர்கள் இந்த தேர்வை எழுதினர்.

இந்த நிலையில் கோவை வடவள்ளிரய சேர்ந்த ஐஸ்வர்யா, குரூப் ஒன் தேர்வு எழுத வந்துள்ளார். அவரது செல்போனில் கூகுள் மேப் பார்த்துக் கொண்டு இடம் தெரியாமல் தவித்துள்ளார்.

பல்வேறு இடங்களில் சுற்றி விட்டு கடைசியாக நேஷனல் மாடல் பள்ளிக்கு வந்துள்ளதால் ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத நிர்வாகிகள் உள்ளே விட மறுத்துள்ளனர்.

இது குறித்து ஐஸ்வர்யா கூறும் போது 2019 ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வுக்காக நான் தயாராக இருந்தேன். பள்ளி நிர்வாகம் கூகுள் மேப் அப்டேட் செய்யப்படாததால் எனது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதே போல இருபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுதாமல் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 369

1

0