சுற்றுலா வழிகாட்டிகளாக மாறிய கிராம மக்கள் : வாழ்வு கொடுக்கும் புல்லாவெளி அருவி… ரம்மியமான ட்ரோன் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
22 September 2022, 4:33 pm

கொடைக்கானல் கூக்கால் அருவிக்கு, சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு முறையான நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கூக்கால் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கொடைக்கானல் கூக்கால் துத்தூர் அருவியின் பிரம்மாண்டமும், அதன் முன்னர் நிற்கும் பொழுது, உடல் வருடிச்சென்று வீசும் மூலிகைச்சாரலும், பயணிகளின் மனைதை கொள்ளை கொண்டு, அருவியின் பேரழகை சமூக ஊடகங்களில், அவர்கள் மேலும் மேலும் பதிவிட பதிவிட, கூக்கால் கிராமத்தின் சுற்றுலா வாழ்வாதாரம் வேகமெடுக்கத்துவங்கியுள்ளது.

அருவிக்கு அழைத்து செல்ல, கிராம மக்கள் சுமார் 100 க்கு மேற்பட்டோர் சுற்றுலா வழிகாட்டிகளாக, குழு அமைத்து, அரசின் அனுமதியுடன் பதிவு செய்து, அருவியை காண வரும் பயணிகளிடம், கட்டணம் பெற்று, இரண்டு ஆண்டுகளாக அருவிக்கு தொடர்ந்து அழைத்து சென்றுள்ளனர்.

அவ்வப்பொழுது விவசாயம் நட்டமடைந்த சுமார் 100 விவசாய குடும்பங்களுக்கு மேல், ஓய்வு நேரத்தில் சுற்றுலா வழிகாட்டிகளாக மாறி, தங்களது வாழ்வாதரத்தை சுற்றுலாவில் இருந்து ஈடுகட்டத்துவங்கினர்.

கூக்கால் கிராம ஏழை விவசாயிகள், கூலி வேலை பார்ப்பவர்கள், வேலையில்லா வாலிபர்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்வில், தூத்தூர் அருவி விளக்கேற்றி வைத்து, மகிழ்ச்சியில் திளைத்து இருந்த, மக்களின் வாழ்வில், அந்த அருவி அமைந்துள்ள இடம் வனப்பகுதியோ அல்லது வருவாய் பகுதியோ, அருவிக்கு பயணிகள் செல்ல வழிமுறைகளை முறையாக ஏற்படுத்தி, கூக்கால் கிராம மக்களின் சுற்றுலா வாழ்வாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?