கார்டூனிஸ்ட் வர்மா கைது.! மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.!!

14 July 2020, 10:14 am
Villupuram Cartoonist Arrest -Updatenews360
Quick Share

விழுப்புரம் : நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிடுவோம் என முகநூலில் அறிவித்த ஓவியர் வர்மா என்கின்ற சுரேந்திர குமாரை சமூக வளைத்ததில் வன்குறும்பு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறை கைது செய்தது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அருகே கீழ்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேந்தர், இவர் விழுப்புரம், சுதாகர் நகரில் ஐ.டி., அலுவலகம் வைத்துள்ளார். இவர் சமூக வளைதலத்தில் வர்மா கார்டூனிஸ்ட் பெயரில் கார்டூன் படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர், தற்போது, கருப்பர் என்ற யூ–டியூப் சேனலின் பின்னால், உள்ள இஸ்லாமிய கும்பலை, தலைவர்களை முன்வந்து கண்டிக்க வேண்டும் என்றும், இந்துக்கள் பக்கம் நிற்கிறோம் என இஸ்லாமியர்கள் உறுதி செய்வதோடு, இந்த சேனலுக்கு பின்னால் உள்ள ஹாசிப்கானை, ஜமாத்களில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதை 24 மணி நேரத்தில் செய்யவில்லை என்றால், இஸ்லாமியர்களால் போற்றப்படும், முகமது நபியை பற்றி கார்டூன் வெளியிடப்படும் என சமூக வளைதளமான ‘பேஸ்புக்கில் ’ பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தொகுதி தலைவர் ரியாஸ் அலி, சுரேந்தரை கைது செய்ய கோரி, புகார் அளித்தார். அதே போல், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில், முகமது ரஃபி என்பவர், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், டவுன் டி.எஸ்.பி., நல்லசிவம் தலைமையில், போலீசார், சுரேந்தரை சமூக வலைதளத்தில் மத மோதலை உருவாக்கும் வீதத்தில் பதிவிட்ட காரணத்திற்காகவும், இரு மதத்தினர் இடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும், சமுக வளைத்ததில் வன்குறும்பு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அவரை கைது செய்து போலீசார் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் அழைத்து சென்று நிதிபதி முன் ஆஜர் முயன்ற போது, இந்து மக்கள் கட்சி மாநில இணை பொது செயலாளர் ஆசைதம்பி தலைமையில் அவரது கட்சியினர் வாகனத்தின் முன் கண்டன கோஷங்களை எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நிதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் அவரை வரும் 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.. கடந்த ஆண்டு சுரேந்திர குமார் இதற்கு முன்னர் திருமாவளவன் பற்றி அவதூராக கார்ட்டூன் படம் வெளியிட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.