அலட்சியம் வேண்டாம் மக்களே…கொரோனா விதிகளை மீறினால் கட்டாயம் அபராதம்: சென்னை மாநகராட்சி கெடுபிடி…!!

Author: Aarthi Sivakumar
27 October 2021, 9:49 am
Quick Share

சென்னை: கொரோனா விதிகளைப் பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனி நபர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்த்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி குறைந்த அளவிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாய விதிமுறைகளை பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறும் கடைகள் மற்றும் தனிநபர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் அங்காடிகள் அதிகமுள்ள தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை, பாடி போன்ற இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 224

0

0