தேர்தல் விதி மீறி கொடிக்கம்பம்.. பாமக பிரமுகரை தாக்கிய திமுகவினர் : வெடித்த மோதல்.. சாலை மறியல்!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2024, 11:57 am

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பெரிய தெரு முனை பகுதியில் பாமக பிரமுகர் ஜவகர் என்பவர் காயலான் கடை வைத்துள்ளார் . அவர் கடையின் அருகே திமுகவினர் புதிய கொடிக்கம்பம் நடுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த போது அதனை ஜவகர் தடுத்து நிறுத்தி தேர்தல் நன்னடத்தை விதிகள் இருப்பதாக கூறியதும் திமுகவினர் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள அருள்மணி என்பவருடன் பத்துக்கும் மேற்பட்டோர் வந்து திமுக கொடி கம்பத்தை ஜவகர் கடை முன்பு அமைத்தனர்.

ஜவகர் இதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த போது , அருள்மணி ஜவகரை தாக்கியதாக கூறப்படுகிறது. தன்னை தாக்கி விட்டார்களே என்று அசிங்கப்பட்ட ஜவகர் , பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற போது, அந்தப் பெட்ரோல் திமுகவினரின் மீதும் பட்டதாக தெரிகிறது.

இதனால் தங்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்த வந்ததாக திமுகவினர் ஜவகர் மீது தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் தேர்தல் நடத்தை விதிகளை மீறி திமுகவினர் செயல்பட்டு கொடி கம்பத்தை அமைத்ததாகவும் மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜவகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜவகர் தாக்கப்பட்டவை அறிந்த பாமக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்து. இருபுறமும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி முரளி தலைமையிலான காவல்துறையினர் துரிதுமாக செயல்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் அப்பகுதியில் பதட்டத்தை தணிக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் நடப்பட்ட திமுக கொடி கம்பத்தையும் காவல்துறையினர் அகற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தன் கடைக்கு முன்பு அமைக்கப்பட்ட கொடி கம்பம் போன்ற அராஜக செயலில் ஈடுபட்ட திமுக உறுப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!