கொஞ்சம் இருங்க நானும் வர…பேருந்தை நோக்கி ஓடி வந்த குட்டி யானை: வழிவிடாமல் குறும்புத்தனம் செய்த வீடியோ வைரல்..!!

Author: Rajesh
17 March 2022, 5:14 pm
Quick Share

கோவை: சிறுவாணி சாலையில் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்த குட்டியானையின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை சாடிவயல் பகுதியில் உள்ள 5 மலை கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை சாடிவயல் பகுதியிலிருந்து வெள்ளப்பதி நோக்கி அரசுப் பேருந்து சென்ற போது திடீரென வனப்பகுதிக்குள் இருந்துவந்த குட்டியானை ஒன்று பேருந்தை வழிமறித்து பேருந்தை நோக்கி ஓடி வந்தது. இதனால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னால் செலுத்தினார்.

இதனை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் அவரது செல்போனில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வழக்கமாக இரவு நேரங்களில் மட்டுமே அங்கு சாலைகளை கடக்கும் யானைகள் கோடைகாலம் என்பதால் தண்ணீர் தேடி வந்திருக்க கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 582

0

0