வெளிநாட்டில் வேலை தேடுபவர்களே உஷார்: லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.38 லட்சம் மோசடி…ஏமாற்று ஆசாமி கைது..!!

Author: Rajesh
17 March 2022, 5:33 pm
Quick Share

லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஆதித்யன், 32. இவர், சிங்கப்பூரில் பட்டயபடிப்பு படித்தவர். தனக்கு வெளிநாட்டு தொடர்புகள் நிறைய இருப்பதாகவும்,அதன் மூலம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித்தர முடியும் என்றும், நண்பர்கள் வட்டாரத்தில் தகவல் பரப்பினார்.

அதை நம்பிய பலரும், ஆதித்யனை தேடி வந்தனர். அவர்களிடம், ‘லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தர பிரிட்டன் விசா வாங்குவதற்கு பணம் செலவாகும்’ என்று கூறி, பெரும் தொகையை வசூலித்துள்ளார். வெளிநாட்டு வேலைக்கு போகும் ஆசையில் இருப்பவர்களின் ஏமாளித்தனத்தை பொறுத்து, லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்துள்ளார்.

கார்த்திக், பிரபாகரன் என்ற இரு ஐ.டி., இன்ஜினியர்களிடம் மட்டும், 38 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார். இப்படி பணம் கொடுத்த எவருக்கும், சொன்னபடி ஆதித்யன் வேலை வாங்கித்தரவில்லை. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தபோது, அவர்களை மிரட்டவும் தொடங்கினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த கார்த்திக், பிரபாகரன் ஆகியோர் கொடுத்த புகார்படி, ஆதித்யன் கைது செய்யப்பட்டார். கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், ஆதித்யனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 860

0

0