திமுக கூட்டணிக்கு டஃப் கொடுக்கும் விஜயகாந்த் மகன்.. ஸ்வீட் ரெடியாகிட்டு இருக்காம்..!

Author: Vignesh
4 June 2024, 11:49 am

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று காலை 8 மணி முதல் வாசிக்க தொடங்குகிறது தேர்தல் ஆணையம். 543 மக்களவைத் தொகுதிகளில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறது யாருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொறுத்த வரை பாஜக கூட்டணியை அதிக இடங்களை கைப்பற்றும் என பல நிறுவனங்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் பெரும்பான்மை இடங்களை பெறும் என்றும், ஓரிரு தொகுதிகள் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் செல்லலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பாக தேமுதிக சார்பாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும், பாஜக கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இதில், காலை 11 மணி நிலவரப்படி விஜய பிரபாகரன் 46500 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மாணிக்கம் தாகூர் 44,351 வாக்குகள் பெற்று 2149 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 18,185 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?