நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய மன்சூர் அலிகான்..!

Author: Vignesh
4 June 2024, 12:02 pm

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் அவர்கள் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டார்.

இந்நிலையில், இன்று வாக்கு என்னும் மையத்திற்கு வருகை தந்த அவர் செல்போன் எடுத்து வந்த காரணத்தால் நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், செல்போன் அவரது உரிமையாளரிடம் கொடுத்து விட்ட பின்னர் வாக்கு எனும் மையத்திற்கு அவர் அனுமதிக்கப்பட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

மேலும், வேலூர் மக்களவைத் தொகுதியில் தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள பெட்டி திறக்கப்பட்டு தபால் வாக்குகள் பிரிக்கும் பணி துவங்கியது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 7,362 தபால் வாக்குகளும் 3012 மின்னணு தபால் வாக்குகள் சேர்த்து மொத்தம் 10 ஆயிர த்து 374 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நமக்கு வாய்ப்பே இல்லை சும்மா வேடிக்கை பார்க்க வந்தேன் என சலிப்புடன் கூறியுள்ளார். மேலும், ஐயா ஓட்டிற்கு நான் பணம் கொடுக்கவில்லை. பரிசு கொடுக்கவில்லை ஆகையால் நமக்கு வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!